Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாளை (15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைகிறது!

.

 

மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணிப்பவருக்கு முதல் கிலோமீட்டருக்கு அதிகபட்சமாக 100 ரூபா கட்டணம் விதிக்கப்படும். இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபா அறவிடப்படும்.
அதேவேளை இரவு 10 மணிக்குப் பிறகு காலை 05 மணி வரை இந்தத் தொகையுடன் 15% சேர்க்கப்படும் அந்த கட்டணத்தை மீட்டரில் கணக்கிடுவதில் உள்ள சிரமங்கள் இருப்பினும், ஏதேனும் அநியாயம் நடந்தால் பயணிகள் பொலிஸாருக்கும் வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கலாம் தெரிவித்துள்ளார்.