Breaking News
லண்டன் மாநகர மேயராக சாதிக் கான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்.
பிரித்தானியா நாட்டின் தலைநகர் லண்டன் மாநகர மேயராக சாதிக் கான்.
பிரித்தானியா நாட்டின் தலைநகர் லண்டன் மாநகர மேயராக சாதிக் கான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று லண்டன் மாநகர மேயராகி உள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் டெல்லியை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் தருண் குலாட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இங்கிலாந்தில் உடனடியாக பொது தேர்தலை பிரதமர் அறிவிக்க வேண்டும் என்று லண்டன் மாநகர மேயராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதிக் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.