Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மேல் அடக்குமுறைக்கெதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டம்

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் அடக்குமுறை!

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மேல் அடக்குமுறைக்கெதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டம்
கொழும்பு – வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கெதிராக, இன்று பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் சிறப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசின் அடக்குமுறைகள் ஜனநாயகத்திற்கும், ஊடகச் சுதந்திரத்திற்கும் நேரடியான அச்சுறுத்தலாக இருப்பதை வலியுறுத்தினர்.
இதில் குறிப்பாக குமணன் தொடர்பாக இடம்பெறும் அடக்குமுறைச் சம்பவங்கள் தீவிரமாக எடுத்துரைக்கப்பட்டன. அவர் எதிர்கொண்டுள்ள மிரட்டல்கள், கண்காணிப்புகள், மற்றும் சுதந்திரமாக செயற்படுவதற்கு உருவாக்கப்படும் தடைகள் குறித்து போராட்டக்காரர்கள் கவலை வெளியிட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “வடகிழக்கில் ஊடகவியலாளர்களின் குரலை அடக்க அரசாங்கம் மற்றும் இராணுவம் முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்” என தெரிவித்தனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஆதரவு தெரிவித்தனர். ஊடகவியலாளர்கள் மேல் நடைபெறும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, ஊடகச் சுதந்திரத்தைக் காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாகும்.