Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மாலைத்தீவு போதைப்பொருள் கடத்தல் 5 இலங்கையர்களை 30 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை!

மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை 30 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க மாலைத்தீவு பாதுகாப்பு பிரிவினர் தீர்மானித்துள்ளனர். 
கடந்த நவம்பர் 7ஆம் திகதி அவிஷ்க புத்தா எனும் பலநாள் மீன்பிடிப் படகு, மாலைத்தீவு கடல் எல்லைக்குள் 355 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதன்போது படகில் இருந்த ஐந்து இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படை மற்றும் அந்நாட்டு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்ட விசாரணையை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, குறித்த மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் அண்மையில் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தனர். 
எனினும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக, மாலைத்தீவு சென்ற இலங்கை பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப உள்ளனர்.