Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

மியன்மாருக்கு செல்லவுள்ள இலங்கை வைத்திய குழு

,

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையிலிருந்து வைத்திய குழு ஒன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, மியன்மார் அரசாங்கம் அறிவித்தவுடன் சம்பந்தப்பட்ட வைத்தியக் குழுவை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
களுத்துறை பிரதேசத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியபோது, அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

"மியன்மாருக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள், அதேபோல் தேவையான மற்ற பொருட்களை வழங்குவதற்கு இப்போது அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கைகளை தயார் செய்து வருகிறது. அதேபோல், இந்த நேரத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு வைத்திய உதவி தேவைப்படுகிறது. அதன்படி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அனுபவம் வாய்ந்த விசேட வைத்திய நிபுணவர்கள் சிலருடன் செவிலியர் சுகாதாரக் குழுவை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளோம். இதனை நாங்கள் விசேட நடவடிக்கைகள் அமைச்சு மூலம் மியன்மார் தூதரகத்திற்கு தெரிவித்தோம். அவர்கள், தயாராக வைத்திருக்குமாறு கூறினார்கள், தேவை ஏற்பட்டவுடன் அதனை உடனடியாக தெரிவிப்பதாக கூறினார்கள். அதன்படி, செய்தி வரும் வரை தேவையான உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்." என்றார்.