ரிக்ரொக் சாளினியால் பாராளுமன்ற சிறப்புரிமையை இழந்த "புலிகேசிஅர்ச்சுனா" அதனை மீளக் கோருகின்றார் !
அர்ச்சுனா மட்டும் பொறுப்பல்ல அவருக்கு நிதியை வாரி வழங்கும் புலம்பெயர்ந்த மக்களும் வாக்களித்தவர்களும் கூட, பெண்கள் தொடர்பான ஆணாதிக்க மனநிலையோடு இருப்பதாக சுவஸ்திகா அருளலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

ரிக்ரொக் சாளினியால் பாராளுமன்ற சிறப்புரிமையை இழந்த அர்ச்சுனா அதனை மீளக் கோருகின்றார் !
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கிளிநொச்சி ரிக் ரொக் சாளினியை விபச்சாரி என்று பாராளுமன்றத்தில் கூறியது தெரிந்ததே. ஒரு பெண்ணை விபச்சாரி என்று கூறியது பாராளுமன்ற விதிமுறைகளுக்கு முரணானது என்றும், இது பெண்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் பெண்ணியவாதியும் மனித உரிமைவாதியுமான அருளலிங்கம் சுவாஸ்திகா கண்டித்திருந்தார். அத்தோடு இதனை பாராளுமன்ற பதிவுகளிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சுவாஸ்திகா சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை பலரும் கோரியிருந்தானர். இந்தப் பின்னணியில் பா உ அர்ச்சுனாவின் பாராளுமன்ற சிறப்புரிமை சிறிதுகாலம் பறிக்கப்பட்டது. அதன்படி அவருடைய பாராளுமன்ற உரைகள் வெளியிடப்படாது. அவரும் அதனை தன்னுடைய காணொலிகளில் பதிவிட முடியாது. இந்தத் தடையை நீக்குமாறு அர்ச்சுனா பாராளுமன்றத்தில் நேற்று எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா உ அர்ச்சுனாவின் பெண்களுக்கு எதிரான மோசமான கருத்துக்களுக்கு அர்ச்சுனா மட்டும் பொறுப்பல்ல அவருக்கு நிதியை வாரி வழங்கும் புலம்பெயர்ந்த மக்களும் வாக்களித்தவர்களும் கூட, பெண்கள் தொடர்பான ஆணாதிக்க மனநிலையோடு இருப்பதாக சுவஸ்திகா அருளலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
ரிக்ரொக் சாளினியை அவமானப்படுத்த முயன்று தற்போது அவமானப்பட்டுள்ள பா உ அர்ச்சுனா, தன்னுடைய சிறப்புரிமையை மீள வழங்காவிடில் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் சிந்தித்து வருவதாகத் தெரிவித்தள்ளார்.
பா உ அர்ச்சுனாவிற்கு எதிரான குற்றச்சாட்டை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் பிரதம கொரடாவான விமல் ரத்நாயக்கா. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விமல் ரத்நாயக்கா உரையாற்றி இருந்தார். அவர் சுவாஸ்திகா சுட்டிக்காட்டியதை தவறாக சுவாஸ்திகாவை பாராளுமன்றத்தில் அரச்சுனா விபச்சாரி என்று சொன்னதாகக் குறிப்பிட்டார். அதாவது கிளிநொச்சிப் பெண் ரிக்ரொக் சாளினியையே பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்தில் விபச்சாரி என்று விபரித்தார். அர்ச்சுனா அருளலிங்கம் சுவாஸ்திகாவை பாராளுமன்றத்துக்கு வெளியே விபச்சாரி என்று விபரித்திருந்தார். ஆனால் விமல் ரத்நாயக்கா சாளினி என்று குறிப்பிடாமல் சுவாஸ்திகாவைச் சுட்டிக்காட்டி அர்ச்சுனாவின் சிறப்புரிமையை குறகியகாலம் தடை செய்ய வைத்தார். இதுதொடர்பில் அருளலிங்கம் சுவாஸ்திகா கபிடல் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்:
இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பெயரை மாறிச் சாளினி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சுவாஸ்திகா என்று சொன்னதை வைத்துக்கொண்டு தன்மீதான ஒழுங்காற்று நடவடிக்கை தவறு என்றும், தான் தமிழர் என்பதால் திட்டமிட்டமுறையில் தனது குரல் ஒடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு தனது குற்றச்சாட்டை சபாநாயகரிடம் பா உ அர்ச்சுனா இன்று கையளித்தார். அர்ச்சுனா தன்மீது விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் வருகின்ற போது, தான் ஒரு ஒடுக்கப்படுகின்ற இனம், தமிழீழ விடுதலைப் புலிகளை நேசிப்பவர், தேசியத் தலைவரை நேசிப்பவர் என்ற துருப்புச்சீட்டுக்களை வீசி விளையாடுவதில் கைதேர்ந்தவர். இது அவருடைய கபிடல் ரிவி நேர்காணலில் அம்பலமாகி இருந்தது.