காரில் களமிறங்கும் விஜயதாச; முக்கிய சகாவான மைத்திரி கைவிட்டாரா?
.
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச கார் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அத்துருகிரியவிலுள்ள ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் சின்னம் அறிவிக்கப்பட்டது.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் எவரும் கலந்து கொள்ளாத நிலையில் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிப்போர் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சுதந்திரக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி விபச்சார குழுவொன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.
அவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர். நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார்.
கட்சியையும் அழித்து 40 வருடங்களாக நாட்டை அழித்த தலைவரால் எவ்வாறு சாத்தியமாகும்? ஏமாறும் அளவுக்கு மக்கள் மனநோயாளிகள் அல்ல” என விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.