Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் திருமணத்திற்கு முன் ஆண், பெண் இருவரும் முழு இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்!

இலங்கையில் தற்போது கிட்டத்தட்ட 2,000 தலசீமியா நோயாளிகள்

இலங்கையில் திருமணத்திற்கு முன் ஆண், பெண் இருவரும் முழு இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்

தலசீமியா நோயை (thalassemia) கட்டுப்படுத்துவதற்குத் திருமண வயதுடைய இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை (Full Blood Count test) மேற்கொள்ள வேண்டும் எனச் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் (தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள்) சம்பிகா விக்ரமசிங்க தெரிவித்தார்.

தலசீமியா நோயாளிகள் ஏனைய நோய் தொற்றாளர்களுடன் திருமணம் செய்வதைத் தவிர்த்தால், இலங்கையிலிருந்து இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார்.

தலசீமியா என்பது மரபணு ரீதியாகப் பரவும் நோய் என்பதை விளக்கிய அவர், இலங்கை மக்கள் தொகையில் 10 வீதமானோர் இந்த மரபணுவைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது கிட்டத்தட்ட 2,000 தலசீமியா நோயாளிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தேசிய சுகாதார பாதீட்டில் 15 வீதமானோர் ஆண்டுதோறும் அவர்களின் சிகிச்சைக்காக ஒதுக்கப்படுகிறது.

ஒரு நோயாளிக்கு ஆண்டுக்கு ரூ.10 மில்லியனுக்கும் அதிகமாகச் செலவிடப்படுகிறது.

என்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு, ஒரு நோயாளிக்கு ரூ.40 மில்லியனுக்கும் அதிகமாகச் செலவாகும் என்று அவர் தெரிவித்தார்.

குருநாகல், அனுராதபுரம், பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட தலசீமியா நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், இலங்கையில் சுமார் 60 குழந்தைகள் தலசீமியாவுடன் பிறப்பதாகவும் தெரிவித்துள்ளார்.