திமுக ஆட்சியின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கி விட்டது! நரேந்திர மோடி .
தமிழ்நாட்டின் முக்கிய பலமே விவசாயிகள் தான். அவர்களுக்காக பாஜக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததுள்ளது. அப்போ பஞ்சாப்பில்?
திமுக ஆட்சியின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி பாரத் மாதா கீ ஜே என்று கூறி தனது உரையை தொடங்கினார்.
அப்போது அவர், "சகோதர, சகோதரிகளே வணக்கம். 2026 ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு நான் வருகை தந்துள்ளேன். பொங்கல், தமிழ்நாட்டின் வளர்ச்சி மனிதன் எம்ஜிஆரின் பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு நல்ல நாட்கள் கொண்டாடப்பட்ட இந்த சிறப்பான வாரத்தில் நான் தமிழகம் வந்துள்ளதை நினைத்து பெருமை அடைகிறேன். பொங்கலுக்கு பிறகு மக்களிடம் ஆனந்தம் நிறைந்திருக்கிறது. இந்தியாவுக்கு தமிழக மக்களின் பங்களிப்பு மிகப் பெரியது. இன்று நேதாஜியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் இருந்து சுபாஷ் சந்திர போஸ்-ஐ வணங்குகிறேன்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்
தமிழ்நாடு தற்போது ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. தமிழக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை விரும்புகிறார்கள். தமிழ்நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். திமுக ஆட்சிக்கான கவுன்ட்டவுன் தொடங்கி விட்டது. இந்த தேர்தலில் அவர்கள் வீழ்த்தப்பட வேண்டும். இந்த மேடையில் இருக்கும் தலைவர்களின் ஒத்துழைப்போடு வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை நிச்சயம் நிகழ்த்திக் காட்டுவோம். திமுகவின் இறங்கு முகம் இன்றிலிருந்து தொடங்கி விட்டது.
திமுக அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்ந்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது. தமிழக மக்கள் நிச்சயம் அதை மன்னிக்க மாட்டார்கள். திமுக அரசு ஊழல், மாபியா, கிரைம் என்ற கோட்பாட்டில் செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை, ஒரு குடும்பம் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
திமுகவுக்கு ஜனநாயக பொறுப்புணர்வு என்றால் என்வென்றே தெரியாது. அவர்களால் மக்களுக்கான ஆட்சியை ஒருபோதும் கொடுக்க முடியாது.
திமுகவின் ஊழல் குழந்தைக்கும் தெரியும்
திமுக ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பது சின்னசிறு குழந்தைக்கு கூட தெரியும். ஊழலின் ஊற்றுக்கண்ணாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி நீடித்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. இவர்கள் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். திமுகவில் ஒருவர் வளர வேண்டும் என்றால், நல்ல நிர்வாகம் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை, கட்சி தலைமைக்கு ஜால்ரா போட்டால் அவர்கள் திமுகவில் வளர்ந்து விடுவார்கள். அது மட்டும் தான் திமுகவில் நடந்து வருகிறது. திமுகவின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
பாஜக ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால், இந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம். 11 லட்சம் கோடி அளவிற்கான திட்டங்களை கொடுத்துள்ளோம். காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு கொடுத்ததை விட, மூன்று மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. காங்கிரஸ்-திமுக ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை போன்று, பாஜக ஆட்சியில் நாங்கள் தமிழ்நாட்டை புறக்கணிக்கவில்லை. பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டில் 80 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் உள்ளிட்ட எண்ணற்ற ரயில்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளோம்.
தமிழ்நாட்டின் முக்கிய பலமே விவசாயிகள் தான். அவர்களுக்காக பாஜக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததுள்ளது. பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாஜக அரசு விவசாயிகளுக்கான அரசு, அவர்களின் வாழ்க்கை சிறக்க தொடர்ந்து பாடுபடும் அரசாக உள்ளது. விவசாயிகள் நாட்டின் சொத்து, அவர்களை பாஜக அரசு எப்போதும் கைவிடாது.
போதைப் பொருட்களின் கூடாரம் தமிழ்நாடு
போதைப் பொருட்களின் கூடாரமாக தமிழ்நாடு மாறியுள்ளது. எங்கு திரும்பினாலும் போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளது. போதைப் பொருள் மாபியா கையில் தமிழக இளைஞர்கள் சிக்கிக் கொண்டுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து விட்டன. போதைப் பொருள்களை பயன்படுத்தி தமிழக இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் கும்பலுடன் திமுக அரசுக்கு தொடர்பு உள்ளது. மாணவர்கள், இளைஞர்களை போதைப் பொருள் கும்பலிடம் திமுக அரசு ஒப்படைத்துவிட்டது. அவர்களை மீட்க வேண்டும். வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நிச்சயம் தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாறும்.
முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் போதைப்பொருகள் கட்டுப்படுத்தப்பட்டு, ஆட்சி அதிகாரம் சிறப்பாக இருந்தது. இன்றைக்கு சட்டம், ஒழுங்கு சீரழிந்து விட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை இன்ஜின் ஆட்சி தேவை. தமிழ்நாட்டின் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப் பொருட்களை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாப்பவும் இந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
வாக்கு வங்கி அரசியல் செய்யும் திமுக
தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றுவதைக் கூட விவாதப் பொருளாக உருவாக்கியுள்ளார்கள். வாக்கு வங்கி அரசியல் செய்வதை திமுக வாடிக்கையாக கொண்டுள்ளது. திமுக தமிழ்நாட்டு எதிராக மட்டும் அல்ல, கடவுளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. இதே போலதான் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட திமுக-காங்கிரஸ் கட்சிகள் முக்கிய காரணமாக இருந்தன. அதை பாஜக அரசு சட்டம் மூலம் உடைத்து தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை மீட்டு கொடுத்தோம். அதை போலவே திமுக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை விரைவில் மீட்போம்" என்றார்.


