Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வவுனியாவில் மரக் கடத்தலில் ஈடுபடும் பொலிசார் : பொதுமக்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு

.

வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள இரணை இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வன இலகா பகுதியில், கடந்தவாரம் வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் தலைமையில் பெரியளவில் மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலங்குளம், இரணை இலுப்பைக்குளம் வன இலகாப் பகுதியில் பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலிற்கு அமைவாக வன இலாகப்பகுதியில் பாரிய மரங்கள் வெட்டப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கடமைக்காகவும் பொறுப்பதிகாரியை காப்பாற்றுவதற்காகவும் சிலரை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் இம் மரக்கடத்தலின் பிரதான குற்றவாளியான பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரிக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ் முறைப்பாடு குறித்து பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.