Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் போராளிகள் நலன்புரிச்சங்கம் ஜனாதிபதிக்கு 18,000 கையெழுத்துக்களுடன் மகஜர்.

.

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும் பெற்றோர்கள் குடும்பத்தவர்களின் கண்ணீரை நிறுத்தும்” – அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் போராளிகள் நலன்புரிச்சங்கம் ஜனாதிபதிக்கு 18,000 கையெழுத்துக்களுடன் மகஜர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராளிகள் நலன்புரிச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி பேராளிகள் நலன்புரிச்சங்கம் சேகரித்த 18000 கையெழுத்துக்களுடனான மகஜர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த மகஜரில் போராளிகள் நலன்புரிச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

எங்களின் துயரத்தின் அளவு குறித்து உங்களிற்கு தெரிவிக்கவேண்டியதில்லை என நாங்கள் கருதுகின்றோம்.

இந்த நாடு ஆட்சி செய்யப்படும் முறையை மாற்றுவதற்காக- இரண்டு தடவைகள் ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்த புரட்சிகர அரசியல் பாரம்பரியத்தினால் வளர்க்கப்பட்டவர் நீங்கள்.

இதன் காரணமாக மிகவும் கொடுமையான மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒடுக்கப்படும் துயரமான வரலாற்று அனுபவம் உங்களுக்குள்ளது.

இலங்கை தமிழ் சமூகத்தினராகிய நாங்கள் வன்முறை கலாச்சாரம்,ஆயுதமோதல்கள் மீது விருப்பு கொண்டவர்கள் இல்லை.

பேராசை அரசியல் கொள்கை மற்றும் ஆட்சியாளர்களால் நாங்கள் அவ்வாறான மோதல்களில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டோம்,எங்கள் இளம் தலைமுறையினர் அரசியல் கொள்கைகளிற்காக போராடினார்கள் சொத்து சேர்ப்பது ,ஏனைய சமூகங்களை அடிபணியச்செய்வது போன்ற பேராசை நோக்கங்களிற்காக அவர்கள் போராடவில்லை.

நாங்கள் எங்கள் மன்றாட்டத்தினை பெரும் நம்பிக்கையுடன் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகளையும் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய பாதிக்கப்பட்டவர்களையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கான உங்கள் நடவடிக்கையை எதிர்பார்க்கின்றோம்.

உங்களுடைய தீர்மானம் தங்கள் நேசத்திற்குரியவர்களுடன் சேர்வதற்காக பல வருடங்களாக காத்திருக்கும் பெற்றோர்கள் குடும்பத்தவர்களின் கண்ணீரை நிறுத்தும்.