2018 ம் ஆண்டு - இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவ விசாரணையை திசைதிருப்ப முயற்சித்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் சற்றுமுன் கைது.
முன்னாள் விடுதலைப் புலிகளிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த அஜந்தன் இந்தபடுகொலையை செய்ததாக அறிக்கையிட்டதையடுத்து அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் கடந்த 2018 ம் ஆண்டு - இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவ விசாரணையை திசைதிருப்ப முயற்சித்த குற்றச்சாட்டில் ; ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் சற்றுமுன் கைது.
வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸாரை கொலை செய்த சம்பவத்தை சரியான முறையில்விசாரணைகளை மேற்கொள்ளாது பிழையான தகவலை வழங்கிய மட்டு. கரடியனாறு தேசிய புலனாய்வுத்துறை சேவை பிரிவில்கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சி.ஜ.டியினர் கொழும்பில் வைத்து நேற்று இரவு (08) கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப் புலிகளிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த அஜந்தன் இந்தபடுகொலையை செய்ததாக அறிக்கையிட்டதையடுத்து அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியை கொழும்பிலுள்ள சி.ஜ.டி நான்காம் மாடியில் தடுத்துவைத்தநிலையில் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் ஸஹரானின் குழுவைச்சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் ஸஹரானின் சாரதியான முகமது சரிப் ஆதம்லெப்பைஇ மில்ஹான்இ பிறதோஸ். நில்காம் உள்ளிட்ட 4 பேரை கைதுசெய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்தது. அதன்பின்னர் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்.
இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பானவிசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தைமூடிமறைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றம் சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர்.
இதனுடன் தொடர்புடைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வரும் தேசிய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவரையும்சி.ஜ.டியினர் வரவழைத்து அவர்களிடம் விசாரணையை முன்னெடுத்த நிலையில் மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வுபிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை நேற்று கொழும்புக்கு வரவழைத்த சி.ஜ.டியினர் கைதுசெய்தனர்.