Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வாக்குக் கோரி எமது கிராமத்திற்கு வந்தால் தாக்கப்படுவீர்கள்: எச்சரிக்கை விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ள மக்கள்

.

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி தமது கிராமத்துக்கு வரும் வேட்பார்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தளை – நாவுல, அடவல கிராம மக்களே இவ்வாறான எச்சரிக்கை விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வருகை தந்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கள் கிராமத்துக்குச் செல்லும் வீதிகள், விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினைகள், போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால், இம்முறை தேர்தலை தங்கள் கிராம மக்கள் புறக்கணிக்கவுள்ளதாகக் கூறுகின்றனர்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் தங்கள் கிராமத்திற்கு வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் தாங்கள் பதில் சொல்லத் தயார் என்றும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.