Breaking News
மாயனின் “நூறு மின்னல்கள்” நாவலிற்கான அறிமுக நிகழ்வு.
.
நான்காம் கட்ட ஈழப்போரில் கிழக்கிலங்கையில் நிகழ்ந்த உண்மைச்சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்ட எழுத்தாளர் மாயனின் “நூறு மின்னல்கள்” நாவலிற்கான அறிமுக நிகழ்வு யாழ் கலைத்தூது கலையகத்தில் நேற்றையதினம் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் எழுத்தாளர் யேசுராஜா, விரிவுரையாளர் கந்தையா ஶ்ரீகணேசன், வைத்தியகலாநிதி எஸ் சிவதாஸ், எழுத்தாளர் வடகோவை வரதராஜன், எழுத்தாளர் ரவீந்திரன், ஊடகர் கணபதி சர்வானந்தா, ஊடகர் பாரதி கிழக்கிலங்கை எழுத்தாளர்கள், மற்றும் பலர் கலந்துகொண்டு வாசக அனுபவங்களையும், கருத்துரைகளையும் பகிர்ந்திருந்தார்கள்.