வெறிச்சோடிய பிரச்சார கூட்டம்; ஏமாற்றத்துடன் திரும்பிய பொன்சேகா
.
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற முன்னாள் இராணுவ தளபதியும் , ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம் நுவரெலியா பிரதான நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் மேடை அமைத்து நடைபெற்றது.
எதிர்பாரா விதமாக சரத் பொன்சேகா தலைமையினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைக்கப்பட்ட மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் போடப்பட்டிருந்த இருக்கைகளில் எதிர்பார்த்த அளவில் பொது மக்கள் வருகைத்தந்து அமரவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களும் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.
எனினும், குறித்த கூட்டத்தின் போது ஏராளமான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.