Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மண்டைதீவு உப அலுவலகத்தில் பாரிய அரச சொத்து முறைகேடு - வேலணை பிரதேச சபை அமர்வில் கடும் வாக்குவாதம்!

மண்டைதீவு சுற்றுலாதளத்தின் அமைவில் அரச நிதியும் சொத்துக்களும் உயரதிகாரிகள் மூவரால் சூறையாடப்பட்டுள்ளதாக தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமிநாதன்பிரகலாதன்.

மண்டைதீவு உப அலுவலகத்தில் பாரிய அரச சொத்து முறைகேடு - வேலணை பிரதேச சபை அமர்வில் கடும் வாக்குவாதம்!

மண்டைதீவு சுற்றுலாதளத்தின் அமைவில் அரச நிதியும் சொத்துக்களும்  உயரதிகாரிகள் மூவரால் சூறையாடப்பட்டு அரச சொத்துக்கள் துஸ்யோகம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன்பிரகலாதன் பிரதேச சபையால் இதற்காக விசேட குழு அமைத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு குறித்த அதிகாரிகளிடமிருந்து இழக்கப்பட்ட நிதியை மீழப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (21) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. 
இதன்போது குறித்த "எக்கோ ரூறிசம்" குறித்து பல்வேறு பிரச்சினைகள சபையில் பிரஸ்திக்கப்பு விவாதிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - 
வேலணை பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்பை கருத்திற்கொண்டும்  சுற்றுலாவிகளை கவரும் வகையிலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் அத்திட்டத்திற்கான பொறிமுறை முறையானதாக கட்டமைக்கப்படவில்லை. வேலணை பிரதேச செயலகம் தனது திட்ட வரைபாக கொண்டுவந்த குறித்த திட்டத்தை அன்றைய மாவட்ட அரச அதிபர், எமது பிரதேச சபையிடம் வறுறுத்தியே கையளித்திருந்தார்.
ஆனாலும் அத்திட்டத்தை 2018 ஆம் ஆண்டு எமது அன்றைய சபை குறித்த திட்டம் தொடர்பில் உள்ள குறைபாடுகள் மோசடிகள் தொடர்பில் வெளிக்கொணர்ந்தது மட்டுமல்லாது அன்றைய துறைசார் அமைச்சரது கவனத்துக்கும் கொண்டு சென்றதுடன் அவ்வமைச்சரால் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
எனவே குறித்த விடையம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வை எட்டவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.