Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மகிந்த ராஜபக்சவிடமிருந்து ஒரு நற்செய்தி: வேட்பாளர் யார்?

.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவோம் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

”ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ளும் வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என்பதே மக்களுக்கு கூறவேண்டிய நற்செய்தி.

உரிய நேரம் வரும் போது எமது வேட்பாளர் யார் என்பதையும் அறிவிப்போம். மிகவும் பலம்வாய்ந்த ஒரு வேட்பாளரை நாம் முன்னிறுத்த உள்ளோம். ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் நாம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.

ஏனையவர்களின் ஒத்துழைப்புடனையே வேட்பாளரை நிறுத்துவோம். நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொது வேட்பாளர் ஒருவரையே நிறுத்தினோம். தேர்தலின் பின்னர் எமது அரசாங்கமே அமையும்.” என்றும் அவர் இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.