Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வாக்குறுதியளித்த முறைமையில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்!

323 சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் என்பதை தெரியாமலா விடுவிக்கப்பட்டுள்ளது!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. ஜனாதிபதிக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தெரியாமல் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். துறைமுகத்தில் இருந்து 323 சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் கூட விடுவிக்கப்பட்டுள்ளன. முறைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்படுவது குறித்துக் கூட ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளும் அறியாதிருக்கும் சந்தர்ப்பத்தில், கொள்கலன் விடுவிப்புக்கு எங்ஙகனம் பொறுப்புக்கூற முடியும்? 323 சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் என்பதை தெரியாமலா விடுவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பிரச்சினை எழுந்துள்ளது. இந்தக் கொள்கலன்களில் உள்ள பொருட்களுக்கு யார் பொறுப்பு என்பதை வெளிக்கொணர வேண்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சிரேஷ்ட பிரஜைகளினது சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தையும் இந்த அரசாங்கம் அதிகரிக்கவில்லை. சகல அரசாங்கங்களும் இவர்களினது சேமிப்புகளுக்கான 15% வட்டியை வழங்கியுள்ளன. ஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் அது கிடைக்காது போயுள்ளது. இங்கும் முறைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யும், மோசடியும் ஏமாற்றுமே நடந்து வருகின்றன. முறைமையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மக்கள் எதிர்பார்த்த முறைமையில் மாற்றம் இதுவல்ல. ஆனபடியால் இப்போதாவது நாட்டு மக்களை ஏமாற்றுவதை விடுத்து, யதார்த்தமாக நடந்து கொள்ளுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.