Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை - ஒரு மாதத்தில் 2 தடவை கைதான நபர்!

.

பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்த சந்தேக நபரை இரண்டாவது தடவையாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று (20 ) அதிகாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குறித்த சந்தேக நபரை  1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேக நபர் கல்முனை குடி மதிரிஸா வீதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு பிள்ளையின் தந்தை என்றும்,

கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஐஸ் போதையுடன் ஏற்கனவே அவர்  கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என்றும் விசாரணையில்  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரை இன்று  கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.