Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

UCMAS உலக போட்டியில் அதிக சம்பியன்களை வென்ற யாழ் மாணவர்கள்!

.

இந்தியாவின் புதுடெல்லியில் நேற்று (14) நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சாம்பியன் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

உலக நாடுகளில் இருந்து 1,000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் இலங்கையில் பல பாகங்களில் இருந்து 103 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் பல்வேறுபட்ட பிரிவுகளை சேர்ந்த 16 மாணவர்கள் சர்வதேச சம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில்

யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி centre இருந்து 21 மாணவர்கள் கலந்து கொண்டு மூன்று சம்பியன்களும் யாழ்ப்பாண கிளையில் இருந்து 6 பேர் கலந்து கொண்டு நான்கு மாணவர்கள் சாம்பியன் ஆகியுள்ளனர்.
 
அதேவேளை வெள்ளவத்தை கிளை, திகாரியா கிளை மற்றும் குளியாப்பிட்டியா கிளைகளில் இருந்து சென்றவர்களில் தலா இருவரும் மட்டக்களப்பு கிளை மற்றும் களனியா கிளையில் இருந்து சென்றவர்களில் தலா ஒருவரும் சாம்பியனாக தெரிவாகியுள்ளனர். 

BRAINWAVE ACADEMY யின் மூலம் UCMAS, Robotics, English Speaking பாட நெறிகளை நடாத்தி வருகின்ற ஆசிரியர் தயானா.சந்துரு வின் வழிகாட்டலில் ஆரம்பித்த மிக குறுகிய காலத்தில் National, International ரீதியாக UCMAS யாழ்ப்பாண கிளை நிறுவனம் சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.