Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சிவில் சமூகத் தரப்பினரிடத்தில் இருந்து பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் - தமிழ்த் தேசியக் கூட்டணி

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தீர்க்கமான முடிவினை அறிவிக்காத நிலை

தனியாகவும், கூட்டாகவும் மீள ஆராய்வதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவு; தமிழரசுக் கட்சியுடன் பேசவும் முஸ்தீபு.

தனித்தனியாவும், கூட்டணியாகவும் பேசிய பின்னரேயே இறுதித் தீர்மானம் எடுக்க முடியும் என்று ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் தீர்மானமின்றி கூட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

உரும்பிராய் சிவகுமாரன் சிலை அருகில் உள்ள கூட்டுறவு அரங்கில் ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணித் தலைவர்களுக்கும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ்பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, வேந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். சிவில் அமைப்புக்களின் சார்பில் பேராசிரியர் கணேசலிங்கம், ஆய்வாளர்களான யோதிலிங்கம், நிலாந்தன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த உரையாடலின்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுப்பதை மையப்படுத்தியே உரையாடல்கள் ஆரம்பமாகியிருந்தன. 

குறிப்பாக இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தீர்க்கமான முடிவினை அறிவிக்காத நிலையில், அக்கட்சியின் முடிவு கிடைக்கும் வரையில் காத்திருக்காது அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

விசேடமாக, சிவில் சமூகத் தரப்பினரிடத்தில் இருந்து பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்து உறுதியாக முன்வைக்கப்பட்டது. அதேபோன்று, சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பிலும் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது உறுதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தொனிப்பட கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.

எனினும் ரெலோ, புளொட், மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய தரப்புக்கள் சில கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தன. குறிப்பாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் தீர்மானம் எடுப்பது தான் மிகவும் முக்கியமான விடயம் என்பதை வலியுறுத்தின.

குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பங்கேற்பு இல்லாத சூழலில் தமது கட்சிக்குள், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாகவும் இருவேறு சந்திப்புக்களை நடத்தியதன் பின்னரேயே முடிவினை எடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டது.

அத்துடன் இலங்கைத் தமிழரசுக்கட்சியுடனும் பேச்சுக்களை முன்னெடுப்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான நிலையில் பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாக மீண்டும் கூடிப்பேசுவதென்ற நிலைப்பாட்டுடன் தீர்க்கமான  தீர்மானங்களின்றி கூட்டம் நிறைவுக்கு வந்தது.