Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் நடந்த அதிசயம் 20 வருடங்களுக்கு பின் ஊருக்கு வந்த குப்பை வண்டி

,

புத்தளம் நாகவில்லு பகுதியில் அமைந்துள்ள ரசூல் நகர் கிராமத்திற்கு முதல் முறையாக வெள்ளிக்கிழமை (15) குப்பை வண்டி ஊருக்குள் வந்து குப்பைகளை சேகரித்து சென்றுள்ளது. ரசூல் நகர் கிராமம் உருவாகி சுமார் 20 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், ஊருக்குள் முதல் முறையாக குப்பை வண்டி வந்து குப்பைகளை சேகரித்த விடயம் அப்பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ரசூல் நகர் கிராம பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரசூல் நகர் இணைப்பாளர் அலி அஸீம் ஆகியோர், புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார உறுப்பினரும், புத்தள பிரதேச சபை அபிவிருத்திக்குழு தலைவருமான ஷாஹீன் ரீஸாவிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க, ரசூல் நகர் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை (15) குப்பை வண்டி வந்து குப்பைகளை சேகரித்து சென்றுள்ளது. 

ஊரின் நீண்ட கால பிரச்சினையாக இருந்த குப்பை கழிவு விடயத்திற்கு வெள்ளிக்கிழமை (15) உரிய தீர்வு கிடைத்துள்ளதாகவும், இதனை மிக விரைவாகவும், நேர்த்தியாகவும் பெற்றுத்தந்த பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஷாஹீன் ரீஸாவிற்கு தமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தள பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த குப்பை வண்டி சுழட்சி முறையில் ரசூல் நகர் கிராமத்துக்கு தொடர்ச்சியாக வருகை தரும் எனவும் ரசூல் நகர் கிராம மக்களினால் ஊரின் ஏனைய அத்தியாவசிய குறைபாடுகள் குறித்து தம்மிடம் வைக்கப்பட்ட வேண்டுகோள் படிப்படியாக பூர்த்திசெய்யப்படும் எனவும் புத்தள பிரதேச சபை அபிவிருத்திக்குழு தலைவர் ஷாஹீன் ரீஸா தெரிவித்துள்ளார்.
ரசூல் நகர் கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை (15) தினம் வருகை தந்த குப்பை வண்டி அலி அஸீமின் வழிகாட்டலின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது