Breaking News
பிரான்ஸில் வங்கிக் கடன் கட்ட முடியாமல் தவிக்கும் மக்கள்!
,

பிரான்ஸில் அதிகப்படியான வங்கிக்கடன்களினால் சிக்குண்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பிரெஞ்சு மக்கள் கடன்காரர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Banque de France தெரிவித்த தகவல்களின் படி, 2024 ஆம் ஆண்டில் €4.5 பில்லியன் யூரோக்கள் கடன் மீளச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிகப்படியான வங்கிக்கடன் ; இந்நிலையில் கிட்டத்தட்ட 600,000 பேர் அதிக கடன்களில் சிக்கித்தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு தொகையாவும், கடன்காரர்களின் எண்ணிக்கையாவும் இது இருக்கிறது.
குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 11% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் Banque de France அறிவித்துள்ளது.
பணவீக்கம், வேலையின்மை மற்றும் மக்களின் வாங்கும் திறன் மோசமடைந்தமை போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது. மேலும் வீடு வாங்குவதற்காக பெறப்பட்ட கடன்களே இவற்றில் பிரதானமானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.