வடக்கு மாகாண பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக பால் உற்பத்தி உபகரணங்கள்!
நீண்ட காலத்துக்கு பின்னர் கோப்பாய் அரச கால்நடை வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டில் கிடைக்கப்பெற்ற நிதிக்கு அமைய கோப்பாய் அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு உட்பட்ட பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தும் முகமாக பால் உற்பத்தி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (13)காலை இடம் பெற்றநீண்ட காலத்துக்கு பின்னர் கோப்பாய் அரச கால்நடை வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்ட
கோப்பாய் பணிமனை அரச கால்நடை வைத்தியர் செல்வராசா ரிசாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் விருந்தினராக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார மாகாண பணிப்பாளர் சிவகுரு வசீகரன் மற்றும் கால்நடை வைத்தியர் கணேசன் ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட பண்ணையார்களுக்கு பால் சேகரிப்பு உபகரணங்கள் மற்றும் சினைப் படுத்தலுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்தும் முகமாக பாலில் இருந்து கொழுப்பினை பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் போன்றன வழங்கி வைக்கப்பட்டன.
நீண்ட காலத்துக்கு பின்னர் கோப்பாய் அரச கால்நடை வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலத்தில் பண்ணையாளர்களுக்கு மானிய அடிப்படையில் உதவிகளை வழங்குவதை நிறுத்திவிட்டு தற்பொழுது உள்ள அரசாங்கம் வட்டி இல்லா கடன் அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக கடனுதவிகளை வழங்க உள்ளதாக மாகாண பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் கடந்த வருடம் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான கால்நடைகள் இறந்ததாகவும் இதற்காக அரசாங்கம் 90 கோடி ரூபா பணம் ஒதுக்கி உள்ளதாகவும் அது தற்பொழுது பண்ணையாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டு வரப்படுவதாகவும் மாகாண பணிப்பாளர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளம் புயல் காரணமாக மன்னார் மாவட்டம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் கால்நடைகள் பண்ணையுடன் அழிந்ததாகவும் இதனால் பண்ணையார்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் மாகாண பணிப்பாளர் வசீகரன் குறிப்பிட்டார்.
அரசாங்கம் வழங்கும் நிதி உண்மையில் இறந்த மாடுகளுக்கு நிகராக அமையாது என்றும் கூறியவர் ஆனால் தற்பொழுது அரசாங்கம் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.


