48 மணி நேரகால அவகாசத்தை நிராகரித்து ஈரான்! மேலும் ஐந்து நாட்கள் ஈரானுக்கு கட்டாய அவகாசம்!!
ஈரானின் மின் நிலையங்களை அமெரிக்கா தாக்குவதற்கான முன்னேற்பாடுகளை தாம் செய்வதற்கான, தயார்படுத்தல்களுக்கான கால அவகாசம் என்றே உறுதியாக கூறமுடியும்.
ஈரானுக்கு தெரியாது,தொடர்பில் எவரும் இல்லை, யாரும் யாரோடும் பேசவில்லை,அப்போ எப்படி வந்தது ஐந்து நாட்கள்கொண்ட போர் நிறுத்தம்?
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 48”மணிநேர கால அவகாசத்தின் அமெரிக்க அம்சத்தை நிராகரித்து ஈரான் வெளிப்படுத்திய பதில்கள் மிகவும் ஆபத்தானவையாக அமெரிக்காவால் பார்க்கப்படதன் பின்னரே, மேலும் ஐந்து நாட்களை ஈரானுக்கு கட்டாயமாக கொடுத்து அவர்கள் தம்மோடு தொலைத்தொடர்பு ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்,அதில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறிய செய்தி அவரது தனிப்பட்ட வலைத்தளம் ஊடாக வெளிவந்துள்ளது.
இங்கே ஏற்கனவே முடிந்துபோன 48”மணிநேர அமெரிக்க அவகாசத்தின் அம்சங்களில் முதன்மையாக கூறப்பட்ட கோமூஸ் கடல்பாதையை ஈரான் சர்வதேச கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்திற்கு அனுமதிக்கவேண்டும் என்பதேயாகும். அதற்கு ஈரான் கொடுத்த பதில், அந்த கடற்பாதையை தாம் திறக்கப்போவதில்லை, அதை நிரந்தரமாகவே மூடப்போகிறோம் என்பதுதான் அந்த அதிர்ச்சியான செய்தியாகும்.
இதைவிட பெரிய அதிர்ச்சி என்னவெனில்,அமெரிக்கா கொடுத்த அந்த நாற்பத்தெட்டு மணிநேரத்துக்குள் அந்த பாதையை ஈரான் திறந்து அனுமதிக்காவிட்டால்,ஈரானின் அனைத்து மின்நிலையங்களைம் தாம் தாக்கி அழிப்போம் என்ற மிரட்டல் எச்சரிக்கையாகும். ஆனால் அந்த மிரட்டல் எச்சரிக்கைக்கு ஈரான் கொடுத்த பதில்,நீங்கள் எதை தாக்குகிறீர்களோ அதையே நாமும் பதிலுக்கு மத்தியகிழக்கு முழுவதும் உள்ள நாடுகளின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று கூறியது மட்டுமல்லாமல், உப்பு நீரை நன்னீராக்கி உயிர்வாழும் மத்தியகிழக்கு நாடுகள் அனைத்திலுமுள்ள நன்நீர் உற்பத்தி தொழிற்சாலைகளையும் தாக்கி அழிப்போம் என்று பாரிய இடியொன்றை ஈரான் அமெரிக்காவிற்கு கொடுத்துள்ளது.
அப்படியானால் அந்த 48”மணிநேர கால அவகாசத்தின் முடிவில் அமெரிக்கா தொடுக்கவிருந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானால் கூறப்பட்ட பதில்தாக்குதல்கள் நிச்சயம் நடந்தே தீரும் என அமெரிக்கா கருதியுள்ளது,நம்பியுள்ளது.
ஆகவேதான் அமெரிக்கா தான் ஏற்கனவே வகுத்திருந்த அந்த தாக்குதல் திட்டத்தை ஐந்து நட்களுக்கு தள்ளிப்போட்டு, அதற்குள் ஈரான் எச்சரித்த இலக்குகளை தனது வான்பாதுகாப்பு அமைப்புகளை அந்த நாடுகளின் நிலையங்களை பாதுகாப்பதற்காக பொருத்திவிட்டு,ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த 48”மணிநேர அவகாசத்தின் முடிவிலக்கை அமெரிக்கா தாக்கியழிக்கப்போகின்றது என்பதே எதிர்பார்கக்கூடிய நிகழ்வாக இருக்கப்போகின்றது.
அத்துடன் இன்று முடிவடைந்த அந்த 48”மணிதேரத்திற்கு சற்று முன்னர்தான் அமெரிக்க ஜனாதிபதி அவர்கள், ஈரான் எச்சரித்த நீர்நிலையங்களை ஈரான் தாக்குமானால் அது பாரிய மனித பேரவலத்தை மத்தியகிழக்கில் உண்டுபண்ணும்’ என்றதுடன், அப்படியொரு தாக்குதல் நிகழுமானால் அது மிகப்பெரும் மனித அழிவை ஏற்படுத்தும் ஆயுத தாக்குதலாகவே தம்மால் கருதப்படும்’ என்றும்,அதாவது ஒரு அணுகுண்டை வெடிக்கவைப்பதுபோன்ற சாவுகளை மத்தியகிழக்கில் ஏற்படுத்தும் என்று அதற்கு அரத்தம்கூறியதுடன், அப்டியொரு மனிதப்பேரவலம் நிகழுமானால் தான் எடுக்கும் முடிவுகளும் மனிதாபிமான அடிப்படையில் பல மில்லியன் மனித உயிகளை காக்க மிகவும் பாரதூரமானதாக இருக்கும் என்றும், அந்த முடிவை எடுக்க தான் ஒருபோதும் தயங்கமாட்டேன் என்றும் பகிரங்கமாக ஈரானை எச்சரித்துள்ளார்.
இங்கேதான் அமெரிக்க ஜனாதிபதியின் தற்போதைய ஐந்து நாட்கள்கொண்ட அவசர தந்திரமான போர்நிறுத்தம் தொடர்பான சந்தேகங்கள் வலுவாக எழுகின்றன.
ஒன்று இந்த ஐந்து நாட்களுக்குள் அமெரிக்க ஆயுதப்படைகள்,மலைகளுக்கு அடியில் ஈரானால் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்க ஏவுகணை தளங்கள் உள்ள மக்கள் நடமாட்டமற்ற சூனிய பிதேசங்களை சிறிய பரப்பளவில்,அல்லது சில கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட பகுதிகளில் தாக்கங்களை ஏற்படுத்தும் மட்டுப்படுத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்கான தயார்படுத்தலுக்கான கால அவகாசமாகவே இந்த ஐந்து நாட்களை அவர்கள் பயன்படுத்தலாம் என்றே பெரும்பாலும் எதிர்பார்க்கமுடியும்.
ஆனாலும் இந்த தாக்குதல் திட்டம் தயாராக இருந்தாலும், இந்த ஐந்து நாட்களின்பின் அமெரிக்கா தாக்கப்போகும் ஈரானின் மின்சார நிலையங்கள்மீதான தாக்குதலை அவர்கள் செய்துமுடித்த பிற்பாடு, ஈரான் ஏற்கனவே தான் எச்சரித்த இலக்குகளை ஈரான் தாக்கத்தொடங்கினால் மட்டுமே????அமெரிக்கா தனது அணு ஆயுத தாக்குதல் தெரிவை கடைசி முடிவாக கையில் எடுக்கும் என்றே உறுதியாக கூறமுடியும்.
அதுவரை அமெரிக்காவின் ஈரான்மீதான தாக்குதல் அனைத்தும் அணுவாயுதம் அல்லாத பாரிய தாக்குதல்களாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் என்பதே எனது போரியல் கணிப்பீடாகும். ஆகவே ஈரானுக்கு தெரியாத இந்த 5”நாட்கள் கொண்ட போர்நிறுத்த அறிவிப்பை அமெரிக்கா அறிவித்ததன் பிரதான நோக்கம், அணுவாயுத தயார்படுத்தலை கைவசம் வைத்துக்கொண்டு ஈரானின் மின் நிலையங்களை அமெரிக்கா தாக்குவதற்கான முன்னேற்பாடுகளை தாம் செய்வதற்கான, தயார்படுத்தல்களுக்கான கால அவகாசம் என்றே உறுதியாக கூறமுடியும்.
எனவே காத்திருங்கள் இந்த ஐந்து நாட்களும் அமெரிக்காவின் தாக்குதல்கள் எவையும் ஈரான்மீது நடைபெறாது, ஈரான் தாக்கினாலும் அதற்கு தற்காப்பு தடுப்பு மட்டுமே அமெரிக்க சார்பில் இருக்கும். ஆனால் இஸ்றேல் அதுவரை ஈரானின் தலைகளை தேடியழிக்கும் தாக்குதல்களை மிகவும் சிறப்பாக தொடர்ந்துகொண்டே இருக்கும்.
- முகநூல் பதிவு


