Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சஜித் தலைமையிலான அணியில் உருவாகியுள்ள மும்முனைப் போர்: கட்சிக்குள் பலமான வாதம்?

.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவரது பதவியிலிருந்து எதிர்வரும் சில நாட்களுள் நீக்கப்படவுள்ள நிலையில், வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் தற்போது மும்முனைப் போர் உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த பதவிக்கு கபீர் ஹசிம் நியமிக்கப்பட வேண்டும் என ஒரு குழு தெரிவித்து வருகிறது.

தென் மாகாணத்தின் வாக்குகளை இலக்கு வைத்து தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபருக்கு பதவி வழங்கப்பட வேண்டுமென மற்றுமொரு குழுவும், பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் இந்த பதவியை பயன்படுத்த வேண்டும் என வேறொரு குழுவும் கருத்து தெரிவித்து வருகின்றன.

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் செயற்பாட்டின் இழப்பினால் ஏற்படும் பாதகத்தை தவிர்க்கும் உத்தியாகவே, குறித்த பதவி பெண்ணொருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று பலமான வாதம் ஏற்பட்டுள்ளது.

மூன்று குழுக்களாக பிரிந்து கிடக்கும் இந்த சித்தாந்தவாதிகளின் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என அக்கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.