Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பலர் திசைகாட்டி சின்னத்திலே...

மட்டக்ளப்பு மாவட்டம் காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இரா.சாணக்கியன்!

சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பலர் திசைகாட்டி சின்னத்திலே தற்போது தேர்தலில் களமிறங்கி இருக்கிறார்கள் என இங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமற் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்ளப்பு மாவட்டம் காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இங்கு வந்து எமது மக்களின் பிரச்சினைகளைப் பார்க்கப்போவது அல்ல. எமது மக்களுடைய பிரச்சனைகள் எமக்குத்தான் தெரியும்.

யானையினால் ஒருவர் பாதிக்கப்பட்டால் உடனே அந்த இடத்தின் நிற்பவர்கள் நாங்கள் தான் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படகு சின்னத்திலே போட்டியிடுகின்றவர்கள் அவர்களுடைய கட்சியின் தலைவருடைய புகைப்படத்தை பிரசுரிக்காமல் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். எவராவது தமது கட்சியின் தலைவரின் புகைப்படத்தை பிரசுரிக்காமல் பிரசுரங்களை விநியோகிப்பார்களா? அவர்களுக்கே புரிந்து விட்டது அவர்களுடைய கட்சித் தலைவரின் படத்தை இட்டு பிரசுரங்களை விநியோகித்தால் அவர்களுக்குக் கிடைக்கும் வாக்கும் இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்