Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் வெறியாட்டம் , 5 வீடுகள் மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல் - 4 பேர் சிக்கினர்..!

ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு வீடு மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் வெறியாட்டம் , 5 வீடுகள் மீது அடுத்தடுத்து  தொடர் தாக்குதல் - 4 பேர் சிக்கினர்..!

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் காவற்துறைப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (2026 மார்ச் 11) அதிகாலை ஒரு வன்முறைக் கும்பல் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 
ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு வீடு மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
 
அதிகாலை 1 மணியளவில் ஆரம்பமான இந்த வன்முறைச் சம்பவங்களின் போது, ஆத்திரமடைந்த ஊரவர்கள் ஒன்றிணைந்து வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வரை மடக்கிப் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 
முதலில் மீசாலை மேற்கில் ஒரு வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளது.

அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பல் தட்டான்குளம் பகுதயில்  இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது. இதில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமானது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாயின.
பின்னா் மீசாலை வடக்கில்  மற்றுமொரு வீட்டினுள் புகுந்த கும்பல் அங்கிருந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன், பொருட்களையும் சேதப்படுத்தியது.

ஐந்தாவதாக மற்றுமொரு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள், ஒரு பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன அடித்து நொறுக்கப்பட்டன. 
வன்முறைச் சம்பவங்களை அறிந்த ஊரவர்கள் உடனடியாக ஒன்றிணைந்து வன்முறைக் கும்பலைத் துரத்திப் பிடித்தனர். இதன்போது பலர் தப்பிச் சென்ற போதிலும், நால்வர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் , இரண்டு வாள்கள் மற்றும் கொட்டான்கள் என்பன மீட்கப்பட்டு கொடிகாமம் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.