Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அறுவை சிகிச்சை

.

 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நேற்று நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நெதன்யாகு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரதமர் மயக்க நிலையில் இருந்து எழுந்து நல்ல நிலையில் உள்ளார். அவர் மீட்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார், வரும் நாட்களில் அவர் கண்காணிப்பில் இருப்பார் என்று ஹடாசா மருத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, நெதன்யாகுவுக்கு புரோஸ்டேட் விரிவாக்கத்தால் சிறுநீர் பாதை தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அவரின் அலுவலம் சார்பில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, மார்ச் மாதத்தில், நெதன்யாகு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.அதேவேளை கடந்த ஆண்டு ஜூலை மாதம், நெதன்யாகுவின் இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ளும் பேஸ்மேக்கரை அவரது உடலில் பொருத்தினர்.