Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

திருகோணமலை செய்தியாளர்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையானது (17) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில நடைபெற்றது.
இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டில் "ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் பத்திரிகையாளர்களின் பங்கு" என்ற கருப்பொருளில் இப்பயிற்சியானது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் டியூட்டர் வீரசிங்க மற்றும் தினகரன் பிரதம ஆசிரியர் தேவதாசன் செந்தில் வேலவர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.  இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர்  பிரியான் விஜபண்டரா, லேக்  ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளர் சிசிறியப்பா ஆகியோரும் கலந்துகொண்டதோடு மட்டுமன்றி ஊடகத்துறை சார்ந்த பல்வேறுபட்ட விடயங்களை எடுத்து கூறினர். 

மேலும் இதன்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் வழங்கப்பட்டன. இலங்கை பத்திரிகை பேரவையின் உதவி பத்திரிகை ஆணையாளர் சுரோச்சன இரங்க அவர்களின் நன்றி உரையுடன் இப்பயிற்சி பட்டறையானது இனிதே நிறைவடைந்தது. இதன்போது கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு இலங்கைப் பத்திரிகைப் பேரவையினால், பிரயாணக் கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் பிராந்திய செய்தியாளர்களாக கடமையாற்றும் அச்சு மற்றும் இலத்திரனியல்  ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இதில்  கலந்து கொண்டனர்.