Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

“புதிய போர்களைத் தொடங்க மாட்டேன்; குறிப்பாக மத்திய கிழக்கில் புதிய மோதல்களில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை” - Donald Trump 2024 தேர்தல் வாக்குறுதி?

அமெரிக்க மக்களின் பெரும்பான்மையினர் ஈரானுக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், கத்தார் நாட்டில் சுமார் 8,000 பயணிகள் இடைநிலையிலே (transit) சிக்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது, “புதிய போர்களைத் தொடங்க மாட்டேன்; குறிப்பாக மத்திய கிழக்கில் புதிய மோதல்களில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை” என்று வாக்குறுதி அளித்தார்.
ஆனால், ஒரு ஆண்டுக்குள் இரண்டாவது முறையாக ஈரானை குறிவைத்து பெரிய அளவிலான வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முறை, அந்த பிராந்தியத்தில் பத்தாயிரக்கணக்கான அமெரிக்க ராணுவத்தினரை நிலைநிறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அமெரிக்க மக்களுக்கு ஜனாதிபதி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாவது, அமெரிக்க மக்களின் பெரும்பான்மையும் ஈரானுக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
அமெரிக்க படைகள் ஏன் அங்கு அனுப்பப்பட்டன என்பதற்கான விரிவான மற்றும் பொதுவான விளக்கப் இதுவரை தெரியவிக்கப்படவில்லை.

மேலும், ஆறு அமெரிக்க ராணுவத்தினர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் ஏன் தங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டியதாகியது என்பதற்கான தெளிவான விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால், விரைவாகவும் தெளிவாகவும் விளக்கம் வழங்கப்படாவிட்டால், இது ஜனாதிபதிக்கு  பெரிய அரசியல் சிக்கலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், உலக எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம்.

நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்றும், ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற ஈரான் அனுமதிக்காது என்றும் திட்டவட்டம். ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்.. உலக எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம்! 
இந்த நீரிணை வழியாக எரிவாயு மற்றும் எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் இணைப்புகளும் தாக்கப்படலாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு (20%) எண்ணெய் போக்குவரத்து மற்றும் கத்தாரின் பெரும்பாலான எரிவாயு விநியோகம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் பதற்ற நிலை காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உலக பங்குச் சந்தைகள் பொதுவாக சரிவை சந்தித்து வருகின்றன.
விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக எண்ணெய் விலைகள் உயருவது இயல்பானது. உலகில் பயன்படுத்தப்படும் மொத்த எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பகுதி ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கடத்தப்படுகிறது. தற்போது அந்த முக்கிய கடல் போக்குவரத்து பாதை அச்சுறுத்தலுக்குள் இருப்பதால் சந்தையில் அச்சமும் அதிகரித்துள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை சுமார் 8% வரை உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $80க்கு அருகில் சென்றுள்ளது. இது $100 வரை உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இதனை கட்டுப்படுத்துவதற்காக OPEC நாடுகள் தினமும் கூடுதலாக 200,000 பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. ஆனால் அந்த அளவு விநியோகம் சந்தைக்கு கிடைக்கவில்லை என்றால் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எண்ணெய் விலை உயர்வு மற்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும், நிதி துறையையும் பாதிக்கக்கூடும். இதனால் உலக பங்குச் சந்தைகளில் பெரிய சரிவு இல்லாவிட்டாலும், முக்கிய குறியீடுகள் அனைத்தும் 1%-க்கும் குறைவாக சரிவடைந்து, சந்தையில் பதற்றம் மற்றும் அதிர்வுகள் காணப்படுகின்றன.

மூன்றாம் உலகப்போரை நோக்கி நிகழ்வுகள் இருக்கின்றன.
சவூதி , ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தை ஈரான் ட்ரோன்கள் தாக்கியுள்ளன.  ஹோர்முஸ் நீரிணையை தாண்டி ஒரு துளி எண்ணெய் கூட செல்லாதென ஈரான் அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் மூன்று F-15 ரக போர் விமானங்கள் தவறுதலாக, குவைத் வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டன. விமானங்களின் பைலட்கள் 6 பேர் பத்திரமாக வெளியேறினர்; இது (தொடர்பாக விசாரணை நடப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவிப்பு.