Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ள கனடா!

.

அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை மாற்ற அழுத்தம் தந்தாலே மற்றும் கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என கனடா எச்சரித்துள்ளது.

மேலும், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் மின்சாரம், எரிபொருட்கள் என அனைத்தும் நிறுத்தப்படுமெனவும் கனடா தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கவுள்ள ட்ரம்ப், சமீபத்தில் கனடா, பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்றும் கனடாவிற்கு கூடுதல் வரி விதிக்கப்படுமெனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்ப், கனடாவின் பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்க முடிவு செய்தால், அமெரிக்காவால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என கனடா எச்சரித்துள்ளது.

மேலும், கனடாவின் பதிலடி பயங்கரமாக இருக்கும் என்றும் இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கையை கனடா ஏற்கனவே முன்னெடுத்துள்ளது.அமெரிக்காவின் நடவடிக்கையைப் பொறுத்து அமெரிக்காவிற்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.