Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலின் உடல் நலம் தொடர்பில் வௌிவந்த புதிய தகவல்!

,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தீவிர வைத்திய கண்காணிப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். 
முன்னாள் ஜனாதிபதிக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் உள்ள குருதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதோடு ஏனைய பிற அறிகுறிகளும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
நீதிமன்றத்தில் பல மணி நேரம் காத்திருந்தபோது மின்சாரம் தடைப்பட்டதாலும், நீண்ட நேரம் தண்ணீர் அருந்தாமையினாலும் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். 
இதன் காரணமாக, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தீவிர வைத்திய மேற்பார்வையின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 

"நான் இப்போதுதான் முன்னாள் ஜனாதிபதியைப் பார்த்தேன். அவருக்கு ஓரளவு நீர்ச்சத்து குறைபாடு இருந்திருக்க வேண்டும், அவரது இரத்தத்தில் சில மாற்றங்கள் மற்றும் பிற அறிகுறிகள் உள்ளன. எனவே, அவரை மூன்று நாட்கள் கடுமையான ஓய்வில் வைத்து, நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க வேண்டும்.நாம் அவ்வாறு செய்யாவிட்டால், இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால்தான் அவர் தற்போது பல நிபுணர்கள் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார். இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் குணமடையாத போது, அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் அந்த சிக்கல்கள் மேலும் தீவிரம் அடையலாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.