Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாட்டில் இனி ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது- ஜனாதிபதி உறுதி!

,

நாட்டில் இனி ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட ஹொரணை தேர்தல் தொகுதியின் கட்சிக் கூட்டம் நேற்று பிற்பகல் ஹொரணை பொகுனுவிட்டவில் உள்ள ஜனசேத விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கும் போது,

“அரசாங்கம் எவ்வளவு காலம் செயற்படும்? 5 வருடங்களுக்கு”

அப்படியானால், நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

பொதுவாக, நம் நாட்டில் அரசியலில் தோற்ற பிறகு, அந்தக் குழுக்கள் கொஞ்சம் கூச்சலிடுவார்கள்.

ஆனால் அது கொஞ்ச காலத்திற்கு தான். இப்போதும் கூட, “அரசாங்கம் நிலையாக இருப்பதற்கு முன்பு அதை சீர்குலைக்க முடியுமா?” என்று கூச்சலிடுகிறார்கள். 

“நாங்கள் அவர்களுக்கு கூற விரும்புகிறோம் கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அது கனவாகவே இருக்கும்.

அரிசி பிரச்சினை உள்ளது. ஏற்றுக்கொள்கிறோம். தட்டுப்பாடு ஏற்பட்டது. தரவுகள் இன்மையே அதற்கு காரணம். நாட்டில் எவ்வளவு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. எவ்வளவு நுகரப்படுகிறது. எவ்வளவு பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது தொடர்பில் தரவுகள் இல்லை.

நான் உறுதியளிக்கிறேன். நாட்டில் இனி ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது.

இந்த பெரும்போகத்தில் நெல் இருப்பது தனியாரிடம் மாத்திரமல்ல அரசிடமும் நெல் தொகையை வைத்திருப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் மேற்கொண்டுள்ளோம்.