Breaking News
மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்பு!
.
புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் இன்று (09) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி ஜனாதிபதி செயலகத்தில், சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.