Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அரசாங்கம் அடக்குமுறையை கைவிட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் - நாமல் ராஜபக்ச!

அடக்குமுறையின் மூலம் ஒருபோதும் ஆட்சியைத் தக்கவைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டு, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும்! சொல்வது யாரு?

​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் பொலிஸ் துறையின் அரசியல்மயமாக்கல் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இன்று பொலிஸ் துறையானது அரசாங்கத்தின் தேவைக்கேற்பவே இயங்குவதாகவும், குறிப்பாக பொலிஸ் மா அதிபர் நாட்டின் பொதுவான அதிகாரியாக அன்றி, ‘திசைகாட்டி’ (தேசிய மக்கள் சக்தி) தரப்பினரின் தேவைகளை நிறைவேற்றும் ஒருவராகவே செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

அண்மையில் பெண் பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை விடுத்து பொலிஸ் அதிகாரிகளின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
​தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது அரசாங்கம் முன்னெடுத்து வரும் அழுத்தங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டார். 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவரின் பெயரை எழுதும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். 
அத்துடன், நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுரேஷ் சலே போன்ற அதிகாரிகளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது அரசியல் பழிவாங்கலின் உச்சக்கட்டம் என அவர் சாடினார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தமக்கு சாதகமான முடிவுகளைப் பெற அரசாங்கம் இவ்வாறான கீழ்த்தரமான தந்திரங்களைக் கையாள்வதாக அவர் குறிப்பிட்டார்.
​பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் சுமைகள் குறித்துப் பேசிய நாமல் ராஜபக்ச, தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம், இப்போது உலகளாவிய நெருக்கடியைக் காரணம்காட்டி மக்கள் மீது மேலதிக சுமைகளை ஏற்றி வருவதாகத் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட துறைகளுக்குச் சலுகைகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மேலும், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதும், சாதாரண மக்களுக்கு ஒரு நீதியும் அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியும் என்ற பாரபட்சமான நிலைப்பாடு தொடர்வதையும் அவர் கண்டித்தார். 
இறுதியாக, அடக்குமுறையின் மூலம் ஒருபோதும் ஆட்சியைத் தக்கவைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டு, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.