Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

G.C.E- O/L கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்.

பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும்.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை (17) செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.
இம்முறை பரீட்சை தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன அதனடிப்படையில் பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் மொத்தம் 451,463 மாணவர்கள் தோற்றுகின்றனர். நாடளாவிய ரீதியில் 3,545 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், மாணவர்கள் பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக தத்தமது பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். காலதாமதத்தைத் தவிர்க்கவும், பதற்றமின்றி பரீட்சையை எதிர்கொள்ளவும் இது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய நாளை (16) எவ்வாறு கழிக்க வேண்டும் என்பது குறித்து ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர், விசேட மனநல மருத்துவர் மியரு சந்திரதாச ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
"மாணவர்கள் இன்றைய தினம் தங்களது மனதை மிகவும் இலகுவாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான அழுத்தங்களைச் சுமக்காமல், நிதானமாகப் பரீட்சைக்குத் தயாராவது சிறந்த பெறுபேறுகளைப் பெற உதவும்."என தெரிவித்துள்ளார்.