கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? வெளியான தகவல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், உயிரிழப்பு தொடர்பாக அறிந்தவுடன் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகளை வழங்கிய முதல்வர், நேற்று நள்ளிரவே விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து கரூருக்கு சென்றார். தொடர்ந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த அவர், அவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வது என தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவரை நடக்காதது. இனிமேல் நடக்கக் கூடாது. விசாரணை ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சீமான், கவிஞர் வைரமுத்து, எல்.முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உயிரிழந்த 39 பேரில் 34 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? வெளியான தகவல்!
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூரில் தவெக விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த 111 பேர் கரூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார்.
நேற்று காலை நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்ட அவர், இரவு 7 மணியளவில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 10 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இதுவரை 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள 4 உடல்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உடல் அடையாளங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் அவர்கள் யார் என்பதை உறுதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அரசு தரப்பில் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வது என தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவரை நடக்காதது. அரசியல் நோக்கத்துடன் எதையும் பார்க்க விரும்பவில்லை. இனிமேல் நடக்கக் கூடாது. விசாரணை ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.


