Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலதும் பத்தும். 01.12.2025 - ‘டிட்வா’ புயல் பேரழிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 355 !

பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே மிக அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

 

 - இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டவர் சிலர் சீரற்ற காலநிலையால் கிளிநொச்சியில் அகப்பட்டுள்ளனர், அவர்களை  விமானப்படை வீரர்கள் இந்தியாவின் ஹெலிகொப்டர் உதவியோடு பாதுகாப்பாக மீட்டு கொழும்பில் சேர்த்துள்ளனர்.

- தரைவழி தொடர்புகள் துண்டித்து வெள்ளத்தில் அகப்பட்டுள்ள சில பிரதேசங்களில்  இலங்கை விமானப்படை வீரர்களின் உதவியோடு  பாகிஸ்தான் விமானப்படை தன்னுடைய   "HABARIN Z-9 உலங்குவானூர்தி மூலம் நிவாரணம் விநியோகம் மேற்கொண்டு வருகின்றது.

- கண்டி கண்ணெருவ நகரப் பகுதியின் பிரதான வீதியோரமாக இருந்த கட்டிட தொகுதி ஒன்று மண் சரிவினால் தரைமட்டமாகியுள்ளது.

- தொடர் மழையால் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலுக்குள் வெள்ளம் உட்புகுந்துள்ளது.

- சீரற்ற காலநிலை காரணமாக, புத்தூர் வீரவாணி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததினால் அந்த பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில் தங்கியுள்ள 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அச்சுவேலி பொலிசாரால், சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.  நாளைய தினமும் அவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கி வைப்பதற்கு பொலிஸார்  தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

- புயல் காரணமாக, இலங்கையில் அகப்பட்டிருந்த 300 இந்தியர்களை இந்தியா தமது விஷேட விமானம் மூலம் இன்று மாலை  மீட்டுச்சென்றது.

- நாட்டில் டிட்வா சூறாவளி இயற்கை அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 334 பேர் உயிரிழப்பு , 370 பேரைக் காணவில்லை.
கண்டி :150, நுவரெலியா :64 - அனர்த்த மத்திய நிலையம் தகவல் வெளியீடு

- ‘டிட்வா’ புயல் பேரழிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு; 366 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்!
சமீபத்தில் நாட்டைத் தாக்கிய சீரற்ற காலநிலை மற்றும் ‘டிட்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Centre – DMC) இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், இந்தத் துயரமான தகவல் வெளியாகியுள்ளது:
•    உயிரிழப்பு எண்ணிக்கை: சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.
•    காணாமல் போனவர்கள்: மேலும், அனர்த்த நிலை காரணமாக 366 பேர் காணாமல் போயுள்ளனர்.
•    அதிகபட்ச பாதிப்பு: மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே மிக அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த இழப்பானது, சமீபத்திய வரலாற்றில் இலங்கை சந்தித்த மிகக் கடுமையான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக உள்ளது.