Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திருவெம்பாவை ஆன்மீகப் பாதயாத்திரை!

.

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு இலங்கை சைவமகாசபையின் வருடாந்த ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை 11 ஆவது வருடமாக மாதகல் சம்புநாத ஈச்சரர் முன்றலில்  நேற்று (05) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியது. 

சம்பில்துறை சம்புநாத ஈச்சரர் ஆலயத்தில் ஆரம்பமாகிய ஆன்மீகப் பாதயாத்திரை சாந்தை, பனிப்புலம், சுழிபுரம், மூளாய், பொன்னாலை, காரைநகரில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களையும் தரிசித்தவாறு காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடைந்தது.

இதன் பொழுது அடியவர்களால் சிவனுக்குரிய பஜனைகள் பாராயணத்துடன் பாதயாத்திரை தரிசித்த ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு தன்னார்வலர்களால் தாக சாந்தியும் வழங்கப்பட்டது. 

யாத்திரையில் அகில இலங்கை சைவமகாசபையினர், தமிழ் சைவ பேரவையினர், சிவமங்கையர், சிவ தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.