Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

நாட்டைப் பிரிக்கும் முயற்சி இன்னும் மாறவில்லை!

தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்பதன் ஊடாக தமிழரும் சிங்களவரும் ஒரு வலிமை மிக்க சக்தியாகப் பரிணமிக்க முடியும்.

நாட்டைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்வதாக பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். 

இந்திய அரசாங்கம் இதற்காக பல்வேறு உத்திகளைத் கையாள்வதாக தேரர் குறிப்பிட்டுள்ளார். 

கொக்காவில் தாக்குதலின் 35வது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார். 

"நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தசம புள்ளிக் கூட மாறவில்லை. 

இந்தியா இப்போது இலங்கைக்கு 300 பில்லியன் ரூபாய் கடன் நிவாரணம் வழங்கப் போகிறது. 

இலங்கை இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் டொலர்களை மீள அறவிடாமல் நமது பெரிய சகோதரர் கடன் நிவாரணம் வழங்கப் போகிறார்.... 

புலம்பெயர் மக்களைப் பயன்படுத்தியேனும், அப்பாவி தமிழ் மக்களைப் பயன்படுத்தியேனும், தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியேனும், நமது நாட்டை பொருளாதார ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஒரு நாடாக நிலைகுலைத்து இறுதியில் 29வது இந்திய மாநிலமாக உருவாக்கி, அதன் பின்னர் கிழக்கு மற்றும் வடக்கை உடைத்த உடனேயே 30வது இந்திய மாநிலமாக உருவாக்கும் திட்டமே இடம்பெறுகின்றது" என்றார்.