Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

புதிய கூட்டு சுமந்திரனுக்கு எதிரானது மட்டுமே!

தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது?

வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுமந்திரன் மீதான எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் செய்யும் பாரிய துரோகம் என சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலையே அவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த செய்தி குறிப்பில்,

தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது?

2025ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அதற்கு முன்னரான இரண்டு தேர்தல்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின்  வெளிப்பாடாக  அமைந்ததுடன், மக்கள் தமது மேலான ஆணையை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வழங்கியிருந்தனர்.

மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் மக்களுக்கான சேவையினை செய்வதற்குப் பதிலாக வாக்குகளை பெற்றுக்கொண்ட கட்சிகள் தனிப்பட்ட அரசியல் பகையை மட்டும் பிரதானப்படுத்தி செயற்படுவது  தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம்.

குறிப்பாக அண்மையில் புதிதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு, திரு. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இதுவரை பேசி வந்த கொள்கைக்கு முற்றிலும் மாறான ஒன்று என்பதுடன், திரு. கஜேந்திரகுமார் தரப்புக்கு இருக்கும் திரு. சுமந்திரன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடிகிறது.

தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை, இவ்வாறான தனிப்பட்ட எதிர்ப்பு அரசியலாக வெளிப்படுத்துவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது?

எனவே, தமிழ் மக்களை மையப்படுத்திய அரசியல் சேவையில் ஓர் அணியாக ஈடுபடுவதே மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் எதிர்பார்க்கும் ஒன்றாக காணப்படுகிறது என செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது