Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சீமான் வேட்பு மனு தாக்கல்; களைகட்டிய தேவக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆயுஷ் வெங்கட் வாஸ்விடம் சீமான் தனது வேட்புமனுவை இன்று சமர்ப்பித்தார். இந்த நிகழ்வின் போது அவரது தாயார் மற்றும் மனைவி கயல்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, களத்தில் முதலாவதாக தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளது. அத்துடன், அனைத்து தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
குறிப்பாக, காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தவைமை ஒருங்கிணைப்பாளர் தமது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆயுஷ் வெங்கட் வாஸ் வசம் தமது வேட்பு மனுவை அவர் அளித்தார்.

காரைக்குடி தொகுதியை பொருத்தவரை, கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் டாக்டர் பிரபு ஆகியோர் களத்தில் உள்ளனர்.
வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுவது தமிழக அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

மொத்தத்தில், வேட்புமனு தாக்கல் தொடக்கத்திலேயே காரைக்குடி தொகுதி முக்கியமான அரசியல் மையமாக மாறி உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் அடுத்த கட்ட பிரச்சாரங்கள் வரும் நாட்களில் இங்கு மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி நிறைவடைகிறது. ஏப்ரல் 23-ந் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.