Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் ; மக்கள் கூட்டத்தின் மீது டிரக் வாகன் மோதி பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு!

.

புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், தனது டிரக் வாகனத்தில் இஸ்லாமிய அரசுக் (ஐஎஸ்ஐஎஸ்) கொடியை பறக்கவிட்டபடி நியூ ஆர்லியன்ஸின் நெரிசலான பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளார்.

அமெரிக்க நகரத்தின் மிகவும் சுறுசுறுப்பான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான பிரெஞ்சு காலனியின் மையத்தில் உள்ள போர்பன் தெருவில் புதன்கிழமை (01) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அல்ல என்று விபரித்துள்ள அமெரிக்க புலனாய்வுப் பிரிவு (FBI) அது ஒரு பயங்கரவாதச் செயல் என்று கூறியுள்ளது.

மக்கள் கூட்டத்தின் மீது டிரக் வாகன் மோதி விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அதனை செலுத்திய சாரதி தடுப்பி ஓட முயற்சித்த போது சட்ட அமுலாக்கத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதனால், இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும், சட்ட அமுலக்கா அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டினால் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வாளர்கள், சந்தேக நபர் 42 வயதான அமெரிக்க குடிமகன் என்றும், அண்டை மாநிலமான டெக்சாஸைச் சேர்ந்த ஷம்சுத்-தின் ஜப்பார் என்ற இராணுவ வீரர் என்றும் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தில் 15 பேரைக் கொன்ற நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் சந்தேக நபர் தனியாக செயல்படவில்லை என்று அமெரிக்க புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் ஒரு இஸ்லாமிய அரசுக் குழுவின் கொடியும், அருகிலேயே இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டனர்.