Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதல்.

.

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையில் யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்று ஒரே நாளில் 267 ஏவுகணை தாக்குதலை ரஷ்ய இராணுவம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரேனில் 13ற்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் இந்த பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க முன்னெடுத்துவரும் நிலையில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேற்றுடன் மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன. ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரேன் இணைவதற்கு ரஸ்யா எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022ஆம் ஆண்டு யுத்தத்தை ஆரம்பித்திருந்தது.இந்நிலையில் ரஷ்யா இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலை நேற்று உக்ரைன் மீது நடத்தியுள்ளது. எனினும் ரஷ்யா ஏவிய 267 ட்ரோன்களில் 138 இடைமறிக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரேன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதல் | Russia Launches Massive Missile Attack Ukraine

இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரேனின் ஐந்து நகரங்களில் ரஷ்யா பாரிய சேதத்தை விளைவித்ததுள்ளதாக உக்ரேன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் வெளியுறவு அமைச்சு இந்த தாக்குதல் சம்பவத்தின் காணொளிகளை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. உக்ரேன் மீதான யுத்தத்தை நிறுத்துவதற்கு சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. உக்ரேனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுப்பதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.