Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மறைந்த மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா!

கே.கே.எஸ் வீதி மாவிட்டபுரத்தில், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (31) இடம்பெற்றது. 

இன்று காலை கே.கே.எஸ் வீதி மாவிட்டபுரத்தில், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
 
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நினைவுப் பேருரை மற்றும் மேடை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.