பிறை நிலவாய் மாறிய சூரியன்! ஆண்டின் முதல் சூரிய கிரகணம்! நீங்க பாத்தீங்களா?
சூரியனை விட நிலவு 15 மடங்கு சிறியதாக இருந்தாலும், அது சூரியனிடமிருந்து 15 மடங்கு தூரத்தில் இருக்கிறது. எனவே, சூரிய கிகரணத்தின்போது சூரியனை அது முழுமையாக மறைத்து விடுகிறது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று தெரிந்திருக்கிறது. இந்தியாவில் இது தெரியவில்லை. மற்றபடி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இது தெரிந்திருக்கிறது. சூரிய கிரகணம் வானியல் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரை 2027ம் ஆண்டில்தான் சூரிய கிரகணம் தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சூரியன் அதை தொடர்ந்து நிலவு மூன்றாவதாக பூமி இருக்கும் நிகழ்வைத்தான் சூரிய கிரகணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். என்னதான் சூரியனை விட நிலவு 15 மடங்கு சிறியதாக இருந்தாலும், அது சூரியனிடமிருந்து 15 மடங்கு தூரத்தில் இருக்கிறது. எனவே, சூரிய கிகரணத்தின்போது சூரியனை அது முழுமையாக மறைத்து விடுகிறது. சூரிய கிரகணம் அமானுஷ்யமான விஷயம் என்று காலம் காலமாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஒரு போரையே நிறுத்தும் அளவுக்கு சூரிய கிரகணம் பற்றிய அமானுஷ்ய கருத்துகள் மனிதர்களிடம் இருந்து வந்திருக்கிறது. உதாரணமாக கி.பி 585ம் ஆண்டு லிடியன் மற்றும் மீடியன் இராஜ்யங்கள் இடையே போர் நடந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டிருக்கிறது. சூரியன் மறைந்து போர்க்களம் இருளாக மாறியதை பார்த்த படை வீரர்கள் உடனடியாக போரை நிறுத்திக்கொண்டனர். போர் கடவுளை கோபப்படுத்திவிட்டதாகவும், எனவே கடவுள் கோபம் கொண்டு சூரியனை மறைத்துவிட்டார் என்றும் இரு தரப்பும் நம்பியது.
ஆனால் இன்றைய நவீன காலத்தில் சூரிய கிரகணம் பற்றி நமக்கு ஏராளமான விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. அதில் சில ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, முழு சூரிய கிரகணம் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் தெரியும். 267 கி.மீ பரப்பளவில் இருப்பவர்களால் மட்டும்தான் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவெனில் ஓரிடத்தில், ஒரு கோணத்தில் தெரியும் முழு சூரிய கிரகணத்தை மீண்டும் நீங்கள் பார்க்க வேண்டும் எனில் 375 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
அதாவது ஒரு குறிப்பிட்ட கோணத்தில், குறிப்பிட்ட இடத்தில் மீண்டும் சூரிய கிரகணம் தெரிய குறைந்தபட்சம் 300 ஆண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல சூரிய கிரகணத்தின்போது நிலவின் மீது அசாதாரணமான காற்று வீசுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நிலவில் காற்று கிடையாது. ஆனால் எப்படி கிரகணத்தின் போது மட்டும் காற்று வீசுகிறது? என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனை ஏதோ ஒரு பொருள் மறைப்பதை போன்று தோன்றும். நிலவுதான் இந்த வேலையை பார்க்கிறது என நமக்கு தெரிந்திருந்தாலும் கூட.. நேரில் பார்க்கும்போது தெரியாது. ஆனால் விண்வெளியிலிருந்து பார்க்கும்போது கறுப்பான ஒரு பந்து சூரியனை மறைப்பது தெரியும்.
ஓர் ஆண்டில் பெரும்பாலும் 2-3 சூரிய கிரகணங்கள் வரை நடக்கும். ரொம்ப அரிதாக 5 கிரகணங்கள் நடக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரி அதெல்லாம் விடுங்க இந்தியாவில் சூரிய கிரகணம் தெரிந்ததா? என கேட்கிறீர்களா! அதான் கிடையாது. இந்தியாவில் கிரணம் தொடங்குவதற்குள் சூரியன் மறைந்துவிட்டது. எனவே நம்மால் கிரகணத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவின் சில பகுதிகளிலும் கிரகணம் தெரிந்திருக்கிறது. நீங்கள் இந்த நாடுகளில் இருந்து கிரகணத்தை பார்த்தீர்களா? எப்படி இருந்தது என்பதை கமென்ட்டில் சொல்லவும்.