Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள்; முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆலோசனை

,

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் நன்மை பயக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், தீங்கான கொள்கைகளை எதிர்ப்பதற்கும் ஒன்றிணைந்த எதிரணியின் அவசியத்தை இந்த சந்திப்பின் போது  சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டு நடவடிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவதே இக் கலந்துரையடலின் முதன்மை நோக்கமாமாக அமைந்தது.

நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒப்புக்கொண்டார்.

இதில்  கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி பெரேரா, ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், பி.சத்தியலிங்கம், ஏ. காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராதா ஜயரத்ன, டி.வி. சானகா மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.