Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri Tech 2025

,

யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri Tech 2025 எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது. 

அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சி  விவசாய பீடத்தில் நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் விவசாய பீட பீடாதிபதி தலைமையில் பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. 

விவசாய பீட பீடாதிபதி கே.பகீரதன் கருத்து தெரிவிக்கையில் எதிர் வெள்ளிக்கிழமை காலை 8.30மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீடத்தில் நடைபெறவுள்ளது. 

விவசாய பீட ஆராய்ச்சி மாணவர்கள், விவசாய பீடம் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ,இந்த பகுதி விவசாயிகள், விவசாயம் சார் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற இளைஞர்யுவதிகள், விவசாயம் சார்ந்த நிறுவனங்களை ஒன்றிணைத்து வருடம் தோறும் நடாத்துகின்றோம்.

2024ம் ஆண்டு விவசாயிகள் மற்றும் விவசாய துறைசார்ந்தோரால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் தற்போது உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் நோக்கமாகும் உங்கள் அனைவரினதும் வருகையையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம். 

ஏனைய வருடங்ளைப்போல் அல்லாது இந்த வருடம் இந்த பகுதிகளுக்கு பொருத்தமான தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்து கண்காட்சிக்கு வைக்கவுள்ளோம் எனவே அனைவரும் கலந்து கொண்டு Agri tech 2025 வெற்றிகரமாக நாடாத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.