Breaking News
வெள்ளைக்காரனின் தேர்தல் அரசியல் ! இங்கிலாந்தில் பாராளுமன்றத் தேர்தல்?
.
வெள்ளைக்காரனின் தேர்தல் அரசியல்
இங்கிலாந்தில் வருகின்ற சூலை மாதம் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. அதையொட்டி, தமிழர்களின் வாக்குகளை சூறையாடும் நோக்கில் தற்போது எதிர்க்கட்சியாகவுள்ள தொழிற்கட்சி இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் வாக்குக்களைப் பெற தமிழ் அரசியல்வாதிகள் விடும் புளுகுகள் போன்று வெள்ளைக்காரனும் விடத் தொடங்கிவிட்டான். தமிழினப்படுகொலைகள் மற்றும் உச்சமான இனவழிப்பு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற காலப்பகுதியில், பிரித்தானியாவில் (1997 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை) ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் இந்த நாசகாரிகளான தொழிற்கட்சியினரே என்பதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியசெய்தி.இப்போது சொல்லுங்கள், இவர்கள் சொல்லியிருப்பது பச்சைப் பொய் என்பதை உணர்கிறீர்களா!